இந்த காம்போ எதிர்பார்க்கவே இல்லையே!... அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இவரா?
May 21, 2024, 18:24 IST
Ajithkumar:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தன்னுடைய திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்கள் தொடர்ந்து கசிய தொடங்கி இருக்கிறது. துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அப்படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு பெரிய அளவில் திருப்தியை கொடுக்காததால் அவரை உடனே படத்தில் இருந்து விலக்கினார். இதையும் படிங்க: இதனால் தான் திடீரென வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்… செம ஐடியா தான்! அவருக்கு பதில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கி வருகிறார். சென்ற வருட கடைசியில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியும் 50 சதவீத படப்பிடிப்பை மட்டுமே முடித்திருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்து இருக்கிறது. இந்த படத்தை நம்பினால் இப்போது வேலைக்காது என முடிவெடுத்தார் அஜித். உடனடியாக கதை கேட்டு ஆதிக் ரவிச்சந்திரனை தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக முடிவெடுத்தார். படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டுள்ளது முதற்கட்ட படப்பிடிப்பும் கடந்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படத்தை இந்த வருட இறுதிக்குள் முடித்து அடுத்த தைப்பொங்கலில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். இதையும் படிங்க: போதுமப்பா விட்ருங்க.. சீக்கிரம் கோட் படத்தினை கழட்டிவிட போகும் தளபதி விஜய்… அடுத்த ப்ளான் என்ன தெரியுமா?
சமீபத்தில் அஜித்தை சந்தித்த மோகன் ராஜா கதை சொல்லி இருந்தாராம். அஜித்துக்கும் அந்த கதை பிடித்துவிட ஏகே64 திரைப்படத்தினை ராஜா இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துக் கொண்டு இப்படத்தில் இணையவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தற்போது விறுவிறுப்பாக இயங்கி வரும் அஜித்தின் அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குனர் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா தன்னுடைய கங்குவா திரைப்படத்தை முடித்து இருக்கும் நிலையில், அடுத்த அஜித்தின் ஏகே63 படத்தினை இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்படத்தை தொடர்ந்து 64வது திரைப்படத்தின் தகவல்கள் கசிந்துள்ளது.
