×

இணையத்தில் கசிந்த கமல் மகளின் அந்தரங்க போட்டோ.. காதலன் சொன்ன பதில்!

நானும், அக்ஷராவும் சுமூகமாக பேசி பிரிந்து அவரவர் வழியில் சென்றோம். 
 
Akshara hasan

உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷராவும், நடிகை ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் விர்வானியும் காதலித்தார்கள். பின்னர் அவர்கள் சுமூகமாக பேசி பிரிந்துவிட்டனர். 

இந்நிலையில் அக்ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்து வைரலானது. அந்த கசிவுக்கு பின்னால் தனுஜ் தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் சந்தேகப்பட்டார்கள்.

Akshara

ஆர்ஜே சித்தார்த் கண்ணனுக்கு அளித்த பேட்டியில் தனுஜ் கூறியதாவது, மீடியாவில் வந்த அனைத்தும் துரதிர்ஷ்டவசமானது. ஏனென்றால் நானும், அக்ஷராவும் சுமூகமாக பேசி பிரிந்து அவரவர் வழியில் சென்றோம். காதல் முறிந்த பிறகும் நாங்கள் நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு இந்த புகைப்பட கசிவு பிரச்சனை ஏற்பட்டது.

நான் அப்பொழுது தான் என் கெரியரில் முன்னேறத் துவங்கினேன். இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கலா என்று தோன்றியது.

Akshara

அந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து கூட என்னிடம் மோசமான கேள்விகள் கேட்கப்பட்டது. நான் அக்ஷ்ராவுக்கு போன் செய்து, நான் அந்த புகைப்படங்களை கசியவிட்டேன் என நினைக்கிறாயா என்று கேட்டேன்.

அதற்கு அவரோ, கண்டிப்பாக இல்லை என்றார். அப்படி என்றால் நான் அதை செய்யவில்லை என்று நீ ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்றேன். அதற்கு அக்ஷராவோ, என் அப்பா அரசியலுக்கு வருகிறார், அதனால் எதுவும் சொல்ல முடியாது என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News