Connect with us
Trisha

Cinema News

த்ரிஷாவுக்கும் எனக்கும் கல்யாணம்- திடீரென கிளம்பிய ஆன்மீக குரு… இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தீங்க?

சமூக வலைத்தளத்தில் தங்களது திறமைகளின் மூலம் மிகப் பிரபலமாக ஆனவர்கள் பலர் உண்டு. ஆனாலும் இணையத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிலர் பிரபலமாவதும் உண்டு. அந்த வகையில் சமீப காலமாக இணையத்தில் வைரலாக வலம் வருபவர்தான் ஏ.எல்.சூர்யா.

போலீஸில் புகார்

ஏ.எல்.சூர்யா ஒரு ஆன்மீக சிந்தனையாளர் எனவும் உத்வேக பேச்சாளர் எனவும் தன்னை கூறிக்கொள்கிறார். மேலும் இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஏ.எல்.சூர்யா நடிகை பத்மபிரியாவை வைத்து ஒரு ஆல்பம் வீடியோவை படமாக்கினார். அதற்கு ஒளிப்பதிவு செய்த லட்சுமி பிரபாகரிடம் பத்மபிரியாவின் தொலைப்பேசி எண்ணை கேட்டு தொல்லைத் தந்ததாக ஏ.எல்.சூர்யாவின் மீது ஒரு புகார் எழுந்தது.

இந்த நிலையில் சில மாதங்களாகவே ஏ.எல்.சூர்யா த்ரிஷா, விஜய் ஆகியோரை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் மிக மட்டமாக பேசிவருகிறார். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீயான் விக்ரம் இன்னும் மூன்று மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூட பதிவிட்டிருந்தார். இவ்வாறு மிக சர்ச்சையான கருத்துக்களை கூறி வருவதால் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறார்.

த்ரிஷாவுக்கும் எனக்கும் கல்யாணம்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ.எல்.சூர்யா, த்ரிஷாவை தான் காதலித்து வருவதாக கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர், லியோ படத்தில் இருந்து த்ரிஷா வெளியேறவேண்டும் எனவும் விஜய் மீது கடும்கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதே போல் த்ரிஷாவை தான் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் “த்ரிஷாவை எப்போது பார்த்தீர்கள்? ஏன் விஜய் மீது கோபம்?” என்று நிருபர்கள் கேள்வியெழுப்பினால், “அதெல்லாம் சொல்லமுடியாது” என கூறுகிறார் ஏ.எல்.சூர்யா. இவ்வாறு தான் கலந்துகொள்ளும் பேட்டிகளில் எல்லாம் த்ரிஷாவை குறித்தே பேசிவருகிறார் இவர்.

இதையும் படிங்க: யோகி பாபுவால் கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு வந்திருக்கும் சிக்கல்… ஏன் இப்படிலாம் பண்றாரு?

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top