×

கியூட் மகனுடன் பிறந்தநாள் கொண்டாடும் ஏ.எல் விஜய்!

இயக்குனர் ஏ எல் விஜய் தனது மகனுடன் 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

தயாரிப்பாளர் ஏ எல் அழப்பனின் இரண்டாவது மகனான  ஏ எல் விஜய் மலையாள இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் தமிழில் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மதராசப்பட்டணம், தெயவ திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார்.

இடையில் நடிகை அமலா பாலுடன் காதல் ஏற்பட அவரைத் திருமணம் செய்துகொண்டு ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தார். இதையடுத்து ஏ.எல் விஜய்  ஐஸ்வர்யா  என்ற பெண் மருத்துவரை கடந்த வருடம் 2வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில  நாட்களுக்கு முன்னர் தான்  விஜய்- ஐஸ்வர்யா தம்பதிக்கு அழகிய ஆண் மகன் பிறந்தான்.  இந்நிலையில் இன்று தனது 41 பிறந்தநாளை தன் மகனுடன் கொண்டாடுகிறார் ஏ.எல் விஜய்.. அவருக்கு நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News