Categories: Cinema News latest news

அலைபாயுதே படம் இந்த நடிகரின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமா?.. ரகசியமாக கசிந்த தகவல்!..

காதல் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே மாறிவிட்டது. காதலிக்காத எந்த மனிதர்களும் இருக்க மாட்டார்கள். அந்த காதலை வித்தியாசமான முறையில் விதவிதமாக சினிமாக்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்றைய தலைமுறை வரை காதல் ஒரு அங்கமாகவே இருக்கிறது.

தமிழ் சினிமாவில் காதலை வித்தியாசமான முறையில் அணுகும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். ரோஜா, பம்பாய் போன்ற படங்களின் வரிசையில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அலைபாயுதே’ திரைப்படம் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : தமிழ்சினிமாவின் வழக்கமான ஃபார்முலாவை உடைத்த நாகேஷ் படம்

மேலும் அந்த படத்தில் அமைந்த பாடல்களும் பசுமையான நினைவுகளை நம் கண்முன் நிறுத்துபவையாக அமைந்தன. ஒட்டு மொத்த இளசுகளை சுண்டி இழுத்த திரைப்படமாக ‘அலைபாயுதே ’ படம் அமைந்தது. இந்த நிலையில் அந்த படத்தின் கதையின் உட்கரு பிரபல நடிகர் ஒருவரின் வாழ்க்கையில் இருந்த எடுக்கப்பட்ட கரு என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. அது வேறு யாருமில்லை. நடிகர் நாசர் தான்.

நாசர் அவரது மனைவியான கமீலாவை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் இருந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தனராம். ஒரு சமயத்தில் அரசல் புரசலாக விஷயம் தெரியவர அதன் பின் தான் வெளிச்சத்திற்கு வந்ததாம். இதை கருத்தில் கொண்டு மணிரத்னம் பாரதிராஜாவின் ஆஸ்தான கதையாசிரியரை அழைத்து இந்த மாதிரியான கதை, இந்த கால இளைஞர்களுக்கு ஏற்ப எழுத வேண்டும் என கூறியபின் உருவானது தானாம் அலைபாயுதே திரைப்படம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini