×

பெண் ரசிகையை அலேக்கா தூக்கி வாழ்த்து சொன்ன சீரியல் நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வருவதை அவரும் நிவர்த்தி செய்து வருகிறார்.

பொதுவாக பெண் கதாபாத்திரங்களுக்கு ஆண் ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள். ஆனால், முல்லை கதாபாத்திரத்திற்கு பெண் ரசிகைகள் தான் அதிகம். அப்படி தீவிரமான ரசிகை ஒருவர் முல்லைக்கு அடிக்கடி பரிசுகளை கொடுத்து மகிழ்விப்பாராம்.

இந்நிலையில் அந்த ரசிகைக்கு நேற்று பிறந்தநாள். அதற்காக அவருக்கு பரிசுகளை கொடுத்து இன்ஸ்டாவில் ரசிகையை அலேக்காக தூக்கியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு  "கண்களை மட்டுமே காட்டி இன்று வரை அன்பை பொழிந்து கொண்டிருப்பவளின் தினம் இன்று என்னை ரசித்த அழகிய பெண் அவளை அனைவரும் ரசிக்க வைத்த தருணம் இது ஹேப்பி பர்த்டே என கூறி பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News