அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்!.. கேன்ஸ் பட விழாவில் ஆலியாவை யாருமே கண்டுக்கலையே பாஸ்!..

 
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்!.. கேன்ஸ் பட விழாவில் ஆலியாவை யாருமே கண்டுக்கலையே பாஸ்!..

பாலிவுட் நடிகை ஆலியா பட், கேன்ஸ் திரைப்பட விழா 2026 தொடக்க விழாவில் கலந்துகொண்ட போது ஏற்பட்ட ஒரு நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் லோரியல் பாரிஸ் தூதராக கலந்து கொண்ட ஆலியா பட், டிசைனர் தமாரா ரால்ஃப் வடிவமைத்த இளஞ்சிவப்பு நிற கவுனில் ரசிகர்களை கவர்ந்தார். ஸ்ட்ராப்லெஸ் கார்செட் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட அந்த ஆடை, இந்திய பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் கைகளில் மெல்லிய டிரேப் அலங்காரத்துடன் அமைந்திருந்தது. மேலும், பிரம்மாண்ட நகைகள் அவரது தோற்றத்திற்கு கூடுதல் அழகை சேர்த்தன.

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்!.. கேன்ஸ் பட விழாவில் ஆலியாவை யாருமே கண்டுக்கலையே பாஸ்!..

மே 12 அன்று நடைபெற்ற கேன்ஸ் சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் ஆலியா பட்ட் பிரம்மாண்டமாக தோன்றியிருந்தாலும், அவரை புகைப்படக் கலைஞர்கள் பெரிதாக கவனிக்காதது போல தோன்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆலியா பட் தன்னம்பிக்கையுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து ரசிகர்களை நோக்கி கைகாட்டி, புன்னகையுடன் ‘ஃப்ளையிங் கிஸ்’ வழங்கி போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பின்னணியில் இருந்த பல சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் அருகில் இருந்த பிற பிரபலங்களை அதிகம் கவனித்தது போல தெரிந்ததால், சமூக வலைதளங்களில் இது குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது.

“இதைக் காண மனசு உடைந்து போகிறது” என்று ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், மற்றொருவர் “யாரும் புகைப்படம் எடுக்காதது போல தெரிகிறது. கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், முழுக்க சிரிப்பை தக்க வைத்திருந்தது அவரின் தைரியத்தை காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், “அவர் யாரை பார்த்து கைகாட்டுகிறார்? ஆனாலும் அவரது தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது” என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பல ரசிகர்கள் ஆலியாவின் அமைதியான அணுகுமுறையையும் தன்னம்பிக்கையையும் பாராட்டியுள்ளனர். சிலர் இந்த சம்பவத்தை அவமான படுத்திய தருணம் என்றும் விமர்சித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் 20 ஆண்டுகளுக்கு மேலாக கேன்ஸ் விழாவுக்கு சென்று பலரை கவர்ந்துள்ளார். ஆலியா பட் சமீப காலமாகத்தான் செல்கிறார் என்பது கூடுதல் தகவல்.

From Around the web