இந்தி சினிமாவில் புகழ் பெற்ற நட்சத்திர தம்பதிகளாக மாறியுள்ளனர் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இவர்களது திருமணம் கடந்த மாதல் ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சூழ இனிதே நடைபெற்றது.
திருமணத்தின் போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து மனப்பூர்வமான கருத்துக்களையும் சேர்த்து பதிவிட்டிருந்தார். ”5 வருடமாக நாங்கள் இருவரும் ஒன்றாக பொழுதை கழித்த இடத்தில் எங்கள் திருமணம் நடைபெறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, காதல், அன்பு, மது , சைனீஸ் உணவுகள் நிறைந்த இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சூழ இந்த திருமணம் நடைபெறுகிறது” என்கிற மாதிரியான கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் இந்த நாளை இருவரும் கொண்டாடி வருகின்றனர். அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் திருமணம் நடந்ததில் இருந்தே ஒவ்வொரு நாளையும் ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இவர்களின் பதிவுகளை பார்த்து ரசிகர் ஒருவர் “ இந்த உலகத்தின் தலைசிறந்த ஜோடி நீங்கள் தான்” என்றும் “ ரோமியோ ஜூலியட்” என்றும் அவர்களை ரசித்து வர்ணித்து தனது கருத்துக்களை பதிவிட்டார். இதை பார்த்த ஆலியா தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் குதித்து வருகிறார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…