முன்புபோல் தற்போதைய திரையுலகமும் நடிகர்களும் இல்லை. ஒரு சிறந்த கதைக்காக நடிகர்கள் மிகவும் மெனக்கெட்டு வருகிறார்கள். படத்தில் அந்த கேரக்டராகவே மாறுவதற்காக நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை நிஜ கதாபாத்திரமாகவே மாற்றி வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல சமீபகாலமாக உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அந்த கேரக்டராகவே மாறுவதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகையும் அதிக உழைப்பை போட்டுள்ளார்.
அதன்படி பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குபாய் கத்தியவாடி படம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கங்குபாயாக நடிகை ஆலியாபட் நடித்துள்ளார். இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் கங்குபாய் என்ற கதாபாத்திரம் நிஜமாகவே வாழ்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பாலியல் தொழிலாளியாக இருந்து அரசியலில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை தான் படமாக உருவாக்கி உள்ளார்கள். ஆலியா பட் தான் இந்த படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.
படத்தில் இந்த கேரக்டரை தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஆலியா பட் மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாத்திபுராவில் உள்ள பாலியல் தொழிலாளிகளை சந்தித்து உரையாடி அவர்களின் வாழ்க்கைக் குறித்தும் நடை உடை பாவனை குறித்தும் அறிந்து கொண்டாராம். இதனையடுத்தே அவர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரை பார்த்து பலரும் ஆலியா பட்டின் நடிப்பை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…