×

பிக் பாஸில் தாத்தாவை மட்டும் மீண்டும் அழைக்கவில்லை... விஜய் டிவியை வச்சு செய்யும் ரசிகர்கள்

தமிழ் பிக்பாஸின் நான்காவது சீசன் பினாலேவை நெருங்கி இருக்கும் நிலையில், வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.
 

கொரோனா பரவலை அடுத்து, இந்தவருட தமிழ் பிக்பாஸ் சீசன் நடக்குமா இல்லையா என பல சந்தேகங்கள் இருந்தது. அதிலும், எந்த வித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த ரசிகர்களுக்கு பிக் பாஸ் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. இதனை சரிப்படுத்தும் விதமாக, போட்டியாளர்களை குவாரண்டைனில் இருக்க வைத்து வீட்டுக்குள் அனுப்பினர். இதனால் பல கட்டுப்பாடுகள் வீட்டில் நிலவியது. ஏகப்பட்ட டிவி பிரபலங்களுக்கு இடையில் சில சினிமா பிரபலங்களும் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தனர். 

ஆரி, ரியோ, கேப்ரியலா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா, சனம் ஷெட்டி முதல் வாரத்திலேயே டிஆர்பி சக்கை போடு போட்டது. டிவி தொகுப்பாளர் அனிதாவுடன் ஆரம்பித்த பிரச்சனையில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். இவருக்கு தாத்தா என செல்ல பெயரையும் ரசிகர்கள் வைத்தனர். தொடர்ந்து, எவிக்‌ஷனை தாண்டிய சுரேஷ் அர்ச்சனா எண்ட்ரிக்கு பிறகு தனது பலத்தை இழந்தார். இதனால் கடைசி வாரம் வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் திடீரென எலிமினேட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, பல பரபரப்புகள் நடந்தது. கடைசியாக ஷிவானி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஆரி, கேபி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகியோர் பைனலுக்கு சென்றுள்ளனர். 

இதை தொடர்ந்து, கடைசி வாரக் கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. அதில் வெளியேறிய போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். இதில் சுரேஷ் சக்ரவர்த்தியை மட்டும் விஜய் தொலைக்காட்சி அழைக்கவில்லை என அவரே தெரிவித்து இருக்கிறார். எல்லா போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு சுரேஷை மட்டும் விட்டது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. சுரேஷ் தாத்தா ஆர்மி சாபம் சும்மா விடாதுங்கோ!


From around the web

Trending Videos

Tamilnadu News