×

எல்லா மதமும் சம்மதமே… கந்தனுக்கு அரோகரா –ரஜினிகாந்த் டிவீட்டால் பரபரப்பு!

கந்த சஷ்டி கவசம் பற்றி சில சர்ச்சையான கருத்துகளை வெளியிட்ட யுடியூப் சேனலுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

 

கந்த சஷ்டி கவசம் பற்றி சில சர்ச்சையான கருத்துகளை வெளியிட்ட யுடியூப் சேனலுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் கந்த சஷ்டி கவசம் பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளுக்கு விளக்கமளித்து கருப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் சில வரிகள் முருகனை ஆபாசமாக சித்தரிப்பதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் சொல்லி அந்த சேனல் மேல் புகார்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து அந்த சேனல் முடக்கப்பட்டு அதைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக் அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்திக் கொந்தளிக்க செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து சம்மந்தப்பட்ட வீடியோக்களை, அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும்..,.

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News