Categories: Cinema News latest news

இதெல்லாம் ரெம்ப ஓவர்.! 40 கதை அஸ்வினின் 30 நிமிட அட்டூழியம்.!

அஸ்வின் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் தேஜு அஷ்வினி, அவந்திகா மிஸ்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் ‘என்ன சொல்லப் போகிறாய்’. இத்திரைப்பம் கடந்த 13 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

அந்த வகையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. இயக்குனர்கள் என்னிடம் கதை கூறும்போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ஹரியின் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதைதான்’ எனப்பேசியிருந்தார்.

 

இதனையடுத்து, இந்த விஷயம் கடும் சர்ச்சையானது. இதனால், இப்படத்தின் இயக்குனர் ஹரி இதற்கு சமாதானப்படுத்தும் வகையில் ஒரு பேட்டி ஒன்றை கொடுங்கள் அப்போ தான் நம்ம படத்தை சுமுகமாக வெளியிட முடியும் என்று கூறினார் அஸ்வினிடம் அதற்கு முடியவே முடியாது என்று அடம்பிடித்து உள்ளார்.

 

இதனை தொடர்ந்து அஸ்வினை சமாதானப்படுத்த தொடங்கினார் இயக்குனர் ஹரி இதனால் வேண்டா வெறுப்பாக ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அது எந்த வகையிலும் இவர் பேசிய வார்த்தைக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தவில்லை.

அதும் மட்டுமில்லங்க… இந்த பேட்டிக்கு வரும்முன் ஹரி அஸ்வினிடம் நீங்கள் வந்து 30 நிமிடம்  பேசினால் போதும் என்று கூறியுள்ளார். அதற்கு அவரும் தனது கையில் கட்டிய கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். 30 நிமிடம் முடிந்ததும்  கிளம்புகிறேன் என்று சென்று விட்டாராம்.

இதையும் படியுங்களேன்- பவுன்சரோடதான் வருவீங்களா?!.. ஒரு படம் கூட நடிக்கல!.. ஓவர் பந்தா காட்டும் அஸ்வின்…

இதற்கிடையில், இவர் பிரபு சாலமன் உடன் கைகோர்த்துள்ள அஸ்வின் புது வித தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லை அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளாதாக கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan