Categories: Cinema News latest news

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு… நயன்தாராவின் புதிய படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஜூன் 9 -ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்த் போன்ற நாடுகளுக்கு தேனிலவுக்காக சென்றார்கள்.

இப்போது மீண்டும் தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன், ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்- நீங்க அனிருத் கிட்ட போங்க… லோகேஷுக்கு அட்வைஸ் செஞ்சி அனுப்பி வைத்த கைதி பிரபலம்…

இதனை தொடர்ந்து, தற்போது நயன்தாரா நடிக்கவுள்ள 75-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அப்படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி மேலும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஜி ஸ்டுடியோஸ், இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதற்கான அறிவிப்பு வீடியோவின்  போஸ்ட்டரை பார்த்த நெட்டிசன்கள் இவங்க பெரிய நட்சத்திர ஹீரோ போல செய்துள்ளார். அந்த இயக்குனர் கூட புதுமுக இயக்குனர் தான் அப்படி இருக்க இப்படி செய்து வீடியோ வெளியிட்டுள்ளாரே என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan