பார்த்து கத்துக்கணும்யா... கோடியில் சம்பளம் - பணத்தை மிச்சம் பண்ணும் அல்லு அர்ஜுன்!
நடிகர் அல்லு அர்ஜுன்:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக எப்படி விஜய் இருந்து வந்தாரோ அதே போன்றே தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர்தான் அல்லு அர்ஜுன். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெற்றி நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார் .
நட்சத்திர நடிகராக தெலுங்கு சினிமாவில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்து வந்தாலும் கோடியில் சம்பளம் வாங்கும் அல்லு அர்ஜுன் பல விஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருந்து வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது .

பணத்தை மிச்சம் பண்ணும் அல்லு அர்ஜுன்:
இவரை பார்த்து தமிழ் நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள். அப்படி என்ன செய்துவிட்டார் என கேட்கும் ரசிகர்களுக்கு இதோ.... ஆம் தயாரிப்பாளரின் பணத்தை மிச்சப்படுத்த நினைத்த அல்லு அர்ஜுன் பிரைவேட் ஜெட் விமான வசதிகளை மறுத்து பிடிப்புகளுக்கு சாதாரண விமானத்தில் பயணம் செய்து வருகிறாராம் .
ஹைதராபாத் மற்றும் மும்பை இடையே நடக்கும் ராக்கா படப்பிடிப்பிற்கு சென்று வர தயாரிப்பு நிறுவனம் அல்லு அர்ஜுனுக்கு பிரைவேட் ஜெட் வசதியை ஏற்பாடு செய்ய முன் வந்தது. ஆனால் அவரோ அந்த ஆடம்பர வசதி எனக்கு வேண்டாம்.

நான் சாதாரண விமானத்தில் பயணம் செய்கிறேன். என்னுடைய வேலை செய்வதற்காக தான் வருகிறேன். அதனால் நீங்கள் மெனக்கெட்டு எனக்கு செலவிட வேண்டாம் எனக் கூறியிருக்கிறாராம். அவரது இந்த சிம்ப்ளிசிட்டி லெவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
