×

அல்லு அர்ஜூனுக்கு கொரோனா பாதிப்பு - தெலுங்கு பட ரசிகர்கள் அதிர்ச்சி

 
அல்லு அர்ஜூனுக்கு கொரோனா பாதிப்பு - தெலுங்கு பட ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘எனக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நானே என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றி வருகிறான். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லோரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். வாய்ப்பிருந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நான் நலமாக இருக்கிறேன். எனவே, என்னை பற்றி என் நலம் விரும்பிகளும், ரசிகர்களும் என்னப்பற்றி கவலைப்பட வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News