Categories: Cinema News latest news

Pushpa 2: அஜித் செய்யாததை அல்லு அர்ஜூன் செய்து கிளாப் வாங்கிட்டாரே.. கத்துக்கோங்க கடவுளே அஜித்தே

Pushpa 2: அல்லு அர்ஜூன் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் புஷ்பா தி ரூல். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய ஹிட்டடித்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் படம் 400 கோடிக்கும் மேலாக கலெக்‌ஷனை அள்ளியது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் உருவானது.

ஏற்கனவே இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜூன் தேசிய விருது பெற்றார். அது மட்டுமில்லாமல் தெலுங்கில் தேசிய விருது பெற்ற முதல் நடிகராக அல்லு அர்ஜுன் திகழ்ந்தார். இதை பற்றி ஒரு பேட்டியில் கூறும் போது ‘தேசிய விருது பெற்ற நடிகர்களின் பட்டியலை பார்க்கும் போது அந்த லிஸ்ட்டில் ஒரு தெலுங்கு நடிகரின் பெயர் கூட இல்லை. எப்படியாவது அதை நாம் பெற வேண்டும் என முயற்சித்தேன்’ என கூறினார்.

இதையும் படிங்க: Vidamuyarchi: எத்தன தடை வந்தாலும் சமாளிப்போம்.. விடாமுயற்சிக்காக களத்தில் இறங்கிய அஜித்

அந்த உத்வேகம் தான் புஷ்பா படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த நிலையில் இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. ஒட்டுமொத்த ஆந்திராவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால் காலையில் ஒரு துயரமான சம்பவம் நடந்தது.

புஷ்பா படத்தின் அதிகாலை காட்சியை பார்க்க கூட்டமாக ரசிகர்கள் வர ஒரு பெண் பலியானார். அதோடு ஒரு சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தான். இந்த செய்தி அல்லு அர்ஜூன் காதுக்கு செல்ல உடனே அவர் செய்த காரியம்தான் இன்று பெரிய அளவில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: இயக்குநர் வீட்டில் நடந்த துக்கம்… பிரபலங்கள் இரங்கல்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவுவதாக உறுதியளித்திருக்கிறாராம் அல்லு அர்ஜூன். தற்சமயம் அந்த சிறுவனுக்காக சிகிச்சைக்கும் அல்லு அர்ஜூன் தேவையான உதவிகளை செய்து வருகிறாராம். இதே போல் ஒரு சம்பவம் தான் அஜித் நடித்த துணிவு படத்திலும் நடந்தது. அப்போது ஒரு இளைஞன் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து உயிரிழந்தான். ஆனால் அதைப் பற்றி அஜித் கண்டுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini