தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். ஐகான் ஸ்டார் என ரசிகர்கள் இவரை அழைக்கிறார்கள். இவரின் பல திரைப்படங்கள் ஆந்திராவில் ஹிட் அடித்துள்ளது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இப்படம் ரூ.350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் அல்லு அர்ஜூன் பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில், விஜயை வைத்து 3 படங்கள் இயக்கிய இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஒரு படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. பிகில் படத்தை இயக்கி கொண்டிருந்த போதே அல்லு அர்ஜுனிடம் ஒரு கதையை கூறியுள்ளார் அட்லீ. தற்போது அந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் சம்மதம் கூறியுள்ளாராம்.
அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஒரு ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். அதேபோல், அல்லு அர்ஜூன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…