1. Home
  2. Latest News

அல்லு அர்ஜூனுக்கே விபூதி அடிச்ச லோகேஷ்!.. அந்த நடிகரிடம் சொன்ன கதையா?..

lokesh

கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய படங்கள் மூலம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். 5 படங்களை மட்டுமே இயக்கிய லோகேஷ் கூலி படத்திற்கு வாங்கிய சம்பளம் 50 கோடி.லோகேஷ் கனகராஜின் வளர்ச்சியை கண்டு மற்ற இயக்குனர்களே பொறாமைப்பட்டார்கள். அவரின் திரைப்படங்களை எல்சியூ என ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அதேநேரம், லியோ படத்தின் இரண்டாம் பாதியிலும், கூலி படத்தின் கதை, திரைக்கதையிலும் சறுக்கினார் லோகேஷ். இது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. லியோ படத்தில் தனது தவறை ஒப்புக்கொண்ட லோகேஷ் கூலி படத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. படம் ரிலீஸாவதற்கு முன் படம் 1000 கோடி தாண்டுமா என்பது எனக்கு தெரியாது.. ஆனால் 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்கவரும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள் என்று சொன்னவர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்ததும் எல்லோரையும் திருப்திபடுத்தும்படி என்னால் படம் எடுக்க முடியாது என்று சொன்னார்.

இதன் காரணமாக ரசிகர்களிடம் அவர் இமேஜும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறது. அடுத்து ரஜினி, கமல் இருவரையும் வைத்து ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அது கைகூடவில்லை. எனவே ஆந்திரா பக்கம் போய் பிரபாஸ், பவன் கல்யாண் ஆகியோரை சந்தித்து கதை சொன்னார். அதுவும் டேக் ஆப் ஆகவில்லை.

suriya

தற்போது அல்லு அர்ஜுனிடம் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார் லோகேஷ். அனேகமாக அட்லி படத்தை முடித்த பின் அல்லு அர்ஜுன் லோகேஷ் இயக்கத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு இரும்பு கை மாயாவி என்கிற கதையை எழுதினார் லோகேஷ். அதை முதலில் சூர்யாவுக்கு சொன்னார். சூர்யாவுக்கு கதை பிடித்திருந்தும் அது நடக்கவில்லை.

அதன்பின் அதே கதையை அமீர்கானுக்கும் சொல்லி ஓகே செய்திருந்தார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. தற்போது அதே கதையைத்தான் அல்லு அர்ஜுனிடம் சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார் என்கிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2026ம் வருடம் துவங்கும் எனவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.