DCயை பாராட்டி தள்ளிய அல்லு அர்ஜுன்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'டிசி'. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் எக்ஸ் தளத்தில் "டிசி படம் பார்த்தேன். இது ஒரு தமிழ் கிளாசிக் படம்.
சினிமா லவ்வராக இருக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன், அனிருத், வாமிகா கபி மற்றும் டிசி படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Watched #DC ! It’s a Tamil classic. Every film lover must watch it. It’s poetry for those who get it.
— Allu Arjun (@alluarjun) August 17, 2026
Congratulations to the entire #DC team. Highest respect to Director @ArunMatheswaran garu. @anirudhofficial absolute master booster! Technically brilliant.
All the artists are…
லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் அடுத்த படத்தில் கதாநாயகன் அல்லு அர்ஜுன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.