கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ராக்கா படம் வேறலெவல்ல இருக்கும் - அல்லு அர்ஜூன் அப்டேட்..
புஷ்பா, புஷ்பா 2 ஆகிய திரைப்படங்கள் மூலம் பேன் இந்தியா நடிகராக மாறியிருப்பவர் அல்லு அர்ஜுன். இவரின் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும், பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவருமான அட்லி இயக்கத்தில் ராக்கா என்கிற திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார்..
ஹாலிவுட் பட ஸ்டைலில் இந்த படம் உருவாகி வருகிறது. எனவே, பல ஹாலிவுட் கலைஞர்கள் இந்த படத்தில் பணி புரிந்து வருகிறார்கள். இந்த படத்திற்கு நிறைய VFX மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாலும், ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுப்பதாலும் படப்பிடிப்பு பல மாதங்கள் நடைபெற்று வருகிறது.
எனவே இந்த படம் தொடர்பான அப்டேட் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அல்லு அர்ஜுன் ‘ராக்கா படம் பற்றிய முக்கியமான அப்டேட்டை விரைவில் வெளியிடுவோம்.. படம் தாமதமாகி வருவது எனக்கு புரிகிறது.. ஆனால் ரசிகர்களுக்கு இந்த படத்தை வழங்கும்போது இது மிகச்சிறந்த படைப்பாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.. அதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக திட்டமிட்டு செய்து வருகிறோம். எனவே ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.. நிச்சயமாக உங்களுக்கு சிறப்பான அப்டேட்டுகளையும், தரமான முன்னோட்டங்களையும் வழங்குவோம்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.
