×

பிரபல நடிகரின் செட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்த போட்டோகிராபர்... படக்குழு அதிர்ச்சி

அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா படத்தின் போட்டோகிராபரான ஸ்ரீனிவாஸ் என்பவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த சம்பவம் படக்குழுவை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. 
 

சுகுமார் இயக்கத்தில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. செம்மரக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


படத்தின் ஷூட்டிங் ராஜமுந்திரியை அடுத்த மேரேடுமல்லி கிராமத்தைச் சுற்றிய மலைப் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீனிவாஸ் என்ற போட்டோகிராபர் நேற்று சென்றிருக்கிறார். ஷூட்டிங்கின்போது நெஞ்சு வலிப்பதாக ஸ்ரீனிவாஸ் கூறியதை அடுத்து, படக்குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை உடனடியாக ராஜமுந்திரியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மாரடைப்பால் உயிரிழந்த ஸ்ரீனிவாஸ் தெலுங்கு உள்பட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் போட்டோகிராபராகப் பணியாற்றியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News