வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி.. இது ஏற்கனவே தனுஷ் நடிச்ச படம்ல? அங்கதான் இருக்கு டிவிஸ்ட்

தொடர் தோல்வி: பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை. இடையில் அவருடைய திருமண விவாகரத்து பிரச்சனை, இப்படி தொடர்ந்து பல சிக்கல்கள் சந்தித்து வந்த ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான இந்த படமும் ரசிகர்களை ஓரளவுதான் திருப்திப்படுத்தியது.
வெற்றிமாறன் கதை: இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. அது வெற்றிமாறன் கதை, அந்த கதையை தான் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார், அதில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் வெற்றிமாறன் கதையில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்பதை பற்றிய ஒரு தகவல் தான் இப்போது வெளியாகியிருக்கிறது.
டிராப் ஆன திரைப்படம்: வெற்றிமாறன் தனுஷ் காம்போவில் வெளியான அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட். அதில் ஆடுகளம் ஒரு ஆகச் சிறந்த திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் தனுஷை வைத்து சூதாடி என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த படம் மேலும் வளராமல் போய்விட்டதாம்.
தலைப்பில் மாற்றம்: அதனால் அந்த படத்தை வெற்றிமாறன் அப்படியே நிறுத்திவிட்டாராம். இப்போது அந்த கதையில்தான் ஜெயம் ரவி நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இப்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப அந்த கதையில் சில பல மாற்றங்கள் செய்து ஜெயம் ரவி நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் தலைப்பு மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் இந்த படமும் ஒரு மாபெரும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தனுஷ் வெற்றிமாறன் என்றாலே அது வெற்றிக்கு கூட்டணி தான். ஏற்கனவே தனுசுக்காக எழுதப்பட்ட கதை, அதில் சில நாட்கள் தனுஷ் நடித்திருக்கிறார். அதனால் இந்த கதை நிச்சயமாக வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது.