2 நடிகர்கள் ரிஜெக்ட் பண்ண கதையா?!. ரஜினி - கமலுக்கே விபூதி அடிக்கப்பார்த்த சுந்தர்.சி!..
ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பிலிருந்தது விலகியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அதுவும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்தான் சுந்தர்.சி. ஆனால், அந்த இரண்டு படங்களின் கதையையும் சுந்தர்.சி எழுதவில்லை. அந்த 2 படங்களிலும் சுந்தர்.சி இயக்குனர் மட்டுமே. கமலின் தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு வந்தது திரையுலகில் பெரிய அதிர்ஷ்டமாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து விலகுகிறேன் என சுந்தர்.சி அறிக்கை விட்டார். ரஜினிக்கு சுந்தர்.சி சொன்னது ஒரு ஹாரர் காமெடி கதை என்கிறார்கள். ஆனால் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை. கதையில் பல மாற்றங்களை செய்து சொன்ன பிறகும் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால்தான் இந்த படத்திலிருந்து விலகி இருக்கிறார் சுந்தர்.சி. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கமல் ‘அது அவரின் முடிவு. நான் ஒரு வியாபாரி.என் நட்சத்திரத்திற்கு பிடிக்கும் வரை இயக்குனரை தேடிக் கொண்டிருப்பேன்; என சொல்லி இருந்தார்.

இந்நிலையில் சுந்தர்.சி ரஜினிக்கு சொன்ன கதையை இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகிய இருவரிடமும் சொல்லி இருந்தாராம். அவர்களே அந்த கதையில் நடிக்கவில்லை. அந்த கதையைத்தான் சுந்தர்.சி ரஜினியிடம் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.ஏற்கனவே இரண்டு நடிகர்கள் ரிஜெக்ட் செய்த கதையை சுந்தர்.சி எப்படி ரஜினியிடம் சொன்னார் என்பது தெரியவில்லை.
இந்த செய்தி வெளியானதும் ரஜினி, கமல் இருவருக்கும் விபூதி அடிக்கப் பார்த்திருக்கிறார் சுந்தர்.சி என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
