மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்.. விஷாலுக்கும் சுந்தர் சிக்கும் இப்படி ஒரு பிரச்சினையா?
எவ்வளவு பிரச்சினை?: சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் மதகஜராஜா. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். படத்தில் விஷாலுடன் சந்தானமும் நடித்திருக்கிறார். அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் எடுக்கப்பட்டு 12 வருடங்கள் ஆன நிலையில் பல பிரச்சனைகளைத் தாண்டி இப்போது தான் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது.
எப்பொழுதுமே பிரஷ் பீஸ்: எப்போது பார்த்தாலும் இந்த படம் ஒரு பிரஷ்ஷான காமெடி திரைப்படமாகத்தான் இருக்கும் என அவ்வப்போது பல பேட்டிகளில் சுந்தர்சி கூறி இருக்கிறார். அதைப்போல இந்த படத்தை சமீபத்தில் பார்த்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் இக்காலத்துக்கும் ஏற்ற ஒரு நகைச்சுவை படமாக தான் இந்த படம் இருக்கிறது என கூறியிருந்தார். இந்த நிலையில் ஒரு காலத்தில் விஷால் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன் என சுந்தர் சி சொல்லி இருக்கிறாராம்.
குஷ்பூ சிபாரிசு: அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்சனை என்று பார்க்கும் பொழுது 12 வருடங்களுக்கு முன்பு பல திரைப்படங்களில் குஷ்பூவுடன் இணைந்து விஷால் நடித்திருக்கிறார். அதன் மூலம் விஷாலுக்கும் குஷ்புவுக்கும் இடையில் நட்பு உருவானது. அப்போது சுந்தர் சியிடம் விஷாலை போய் பாருங்க. அவரை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என கூறி இருக்கிறாராம் குஷ்பூ.
மானஸ்தனான சுந்தர் சி: குஷ்பூ சொன்னதின் பேரில் சுந்தர்சி விஷாலை பார்க்க அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கிறார். ஆனால் விஷால் சுந்தர் சிக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தும் அன்று அவர் வீட்டில் இல்லையாம். இதனால் கடுப்பான சுந்தர்சி நேராக குஷ்பவிடம் வந்து விஷால் மூஞ்சிலேயே இனிமேல் முழிக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ஒரு விழாவில் சுந்தர் சி யும் விஷாலும் சந்தித்துக் கொண்டார்கள்.
அப்போது கூட அருகருகே அமர்ந்திருந்தாலும் சுந்தர் சி விஷால் முகத்தையே பார்க்கவில்லையாம். விழா முடிந்த பிறகு விஷால் சுந்தர் சியிடம் சாரி சார் என்னை மன்னித்து விடுங்கள். நீங்க அன்று வந்த நேரத்தில் நெருங்கிய ஒருவர் இறந்து விட்டார். அது சம்பந்தமாக வெளியில் சென்றுவிட்டேன். அதனால் தான் அன்று நான் வீட்டில் இல்லை என சொல்லி மன்னிப்பு கேட்டாராம் .அதன் பிறகு தான் மதகஜராஜா படத்தின் கதையை விஷாலிடம் சொல்லி அந்த படம் ஆரம்பமாகி இருக்கிறது. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறினார்.