×

சாந்தனுவுக்கு பலபேர் வாழ்த்து சொன்னாலும் இது ஸ்பெஷல்தான்.!.. விக்னேஷ் சிவன் நச் டிவிட்...

இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு. பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் அறிமுகமானாலும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் திணறி வருகிறார். இத்தனைக்கும் நன்றாக நடனம் ஆட தெரிந்தவர்.
 

காதல், பாய்ஸ், சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களில் அவர்தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்த கதைகளை பாக்கியராஜ் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனாலும், வெற்றிப்படமாக அமையவில்லை. ஒருவழியாக விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் வாழ்த்து சற்று கூடுதல் சிறப்பாக அமைந்தது. 

அவரின் டிவிட்டர் பக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தனு. உனக்கு இது ஆசிர்வதிக்கப்பட்ட, சிறப்பான வருடமாக அமையட்டும். உன் திறமை, உன் அர்ப்பணிப்பு, உன் கடின உழைப்பு, விடமுயற்சி நீ விரும்பும் இடத்திற்கு கொண்டு சென்று எல்லோரின் மனதிலும் நீ இடம்பிடிப்பாய். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News