Categories: Cinema News latest news

ஆப்ரேஷன் தியேட்டருக்குள் இது வேணும் என அடம்பிடித்த ஆல்யா மானசா….!

விஜய்டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியல் மூலம் நட்சத்திர தம்பதிகளாக மாறியவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யாமானசா. இருவரும் உயிருக்குயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் ஆல்யா வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையும் மீறி திருமணம் செய்து கொண்டார்கள். ஆல்யா ஒரு நல்ல டான்ஸர். இவர் ஏற்கெனவே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். அங்னு மானஸ் என்பவரை காதலித்து எது முறிந்து விட்டது.

ஆல்யா மற்றும் சஞ்சீவிற்கு ஏற்கெனவே ஒரு மகள் இருக்கையில் அண்மையில் இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்தின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்கு போவதற்கு முன் எனக்கு மேக்கப் கிட் வேணும் என அடம்பிடித்துள்ளார்.

ஏன் என கேட்டதற்கு ஸ்டேட்டஸ் போடும்போது மேக்கப்போடு இருந்தால்தான் நல்லா இருக்கும் என கூறியுள்ளார். அதற்கு சஞ்சீவ் உள்ள போனதும் மயங்கிருவ உனக்கு இப்பொ கூட மேக்கப் வேணுமா என கிண்டலடித்துள்ளார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini