×

தனியாக பைக் ஓட்டும் ஆல்யா... லாக்டவுனில் இதெல்லாம் தேவையா?

ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 
78658592

தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபல நடிகை தான் ஆலியா மானசா.

இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட நிகழ்ச்சியில் பிரபலமாகி, பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” தொடரில் “செம்பா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ராஜா ராணி தொடரில் இவருக்கு ஜோடியாகவும் கதாநாயகனாகவும் நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் சஞ்சீவ்-ஆலியா மானசா காதல் தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது ஆலியா மானசா ராஜா ராணி-2 மெகா தொடரில் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகை பைக் ஓட்டுவதை பலரும் பார்த்து வருவதால் தற்போது அந்த வீடியோவிற்கு வியூஸ்கள் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News