×

பாஜகவில் சேர்கிறேனா? - நடிகர் விஷால் விளக்கம்

 

நடிகராக இருந்து தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க செயலாளர் என அதிரடியாக சினிமா உலகில் பல பதவிகளுகளை பெற்றவர் நடிகர் விஷால். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் அவருக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் பஞ்சாயத்து நீதிமன்றத்திற்கு சென்று அரசு தரப்பில் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு புறம் எனில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால், அவரின் வேட்பு மனு பல களோபரங்களுக்கு பின் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. இதுபற்றி அவர் எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வந்ததால் இந்த செய்தி உண்மையாக இருக்குமோ என்கிற கேள்வி எழுந்தது.

ஆனால், இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நான் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News