×

நான் நடிப்பை விட்றதா?.... 80 வயதிலும் நடிப்பேன் – பிரபல நடிகை நம்பிக்கை!

இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான எமி ஜாக்சன் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான எமி ஜாக்சன் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவரான நடிகை எமி ஜாக்சன் மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தாண்டவம், தங்கமகன்,  ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கிலும் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் இங்கிலாந்துக்கே திரும்பிய அவர் அங்கு ஜார்ஜ் என்பவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு இப்போது ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து அவர் பேசியுள்ளார்.

அவரது நேர்காணல் ஒன்றில் ‘தமிழ் சினிமாதான் என்னை ஒரு நடிகையாக உருவாக்கியது. அங்கு நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் என் நிஜ வாழ்க்கையிலும் என்னை உயர்த்தின. என் மகன் இன்னும் கொஞ்சம் வளரவேண்டும். என் அம்மாவும் கணவரும் எப்போதும் என் கூட இருக்கின்றனர். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். 80 வயதானாலும் நான் தொடர்ந்து நடிப்பேன்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News