×

வீட்டில் பார்ட்டி கொண்டாடும் அமலா பால்... அதுதான் காரணமாம்...!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மே17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். பிரபலங்களும்  வீட்டில் இருக்கின்றனர். 

 

இந்த நிலையில் நடிகை அமலாபால் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் வீட்டில் சீரியல் லைட், சவுண்ட் சிஸ்டம் வைத்து தனியாக பார்ட்டி நடனமாடுகிறார் அமலா பால். அதற்க்கு காரணம் அவரது மூத்த சகோதர்ரர்க்கு இன்று பிறந்தநாள். ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள முடியாத வேளையில் இப்படி வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

சமீபத்தில் 'ஆடை' படத்தில் அமலாபால் நடித்திருந்தார். அடுத்து அதோ அந்த பறவை போல, மலையாளத்தில் Cadaver போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிருத்திவிராஜ் உடன் உருவாகி கொண்டிருக்கும் 'ஆடுஜீவிதம்' படத்தில் தோன்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News