டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் அமலா பால் படம்!

 
Half

தமிழில் 'மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி' போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய மலையாள படம் 'ஹாஃப்' (Half).

இந்த படத்தை இயக்குநர் சம்ஜத் இயக்கியுள்ளார். இதில் அமலா பாலுடன் இணைந்து ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ் நடித்துள்ளனர். 

இதற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார். இதன் திரைக்கதையை சம்ஜத்துடன் இணைந்து பிரவீன் விஸ்வநாத் எழுதியுள்ளார்.

தற்போது, இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், அரபு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகுமாம்.

From Around the web