Categories: Cinema News latest news

பண மோசடியில் ஈடுபடும் கேரள நடிகைகள்!.. பார்த்து உஷாரா இருங்க இளைஞர்களே.. அமலா ஷாஜி சிக்கியது எப்படி?

கேரளாவை சேர்ந்த இளம் இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி 1000 ரூபாய் முதலீடு செய்தால் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் 15 ஆயிரம் இன்வெஸ்ட் செய்தால் 1 லட்சம் கிடைக்கும் என அதுவும் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் என கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்ல அவரது காஜி ரசிகர் ஒருவர் பல ஆயிரம் ரூபாயை இழந்து ஓட்டாண்டியாக தவித்து வருகிறார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமலா ஷாஜியிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்த 100 சதவீதம் நான் கியாரண்டின்னு அளந்த வாய் இப்போ ஆஃப் ஆகி நானே அந்த மோசடியில மாட்டி பல லட்சத்தை இழந்து விட்டேன் என சரண்டர் ஆகி விட்டார்.

இதையும் படிங்க: கூல் சுரேஷ், கேப்டன் மில்லர் கசமுசா!.. அந்த ஐஸ்வர்யாவா ஜாக்கெட் இல்லாம போஸ் கொடுத்துருக்காரு!

அனன்யா ஃபாரக்ஸ் எனும் அமலா ஷாஜியின் தோழியின் இன்ஸ்டா ஐடி பக்கத்தின் மூலம் தான் இந்த பண மோசடி வலை விரிக்கப்பட்டு பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமலா ஷாஜி மட்டுமின்றி மற்றொரு பிரபல மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனனும் இதே மோசடி வலையில் சிக்கியிருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: யாருப்பா விஜய்யா?.. மாநாடு சிம்புவோன்னு நினைச்சிட்டோம்.. இவருக்கு எதுக்குப்பா டீஏஜிங் தண்டச்செலவு!

அதிக ஆசை காரணமாக இளம் நடிகைகள் இளைஞர்களை நம்ப வைத்து ஏமாற்றி வரும் நிலையில், அமலா ஷாஜியின் இன்ஸ்டாகிராமில் இருந்த 4 மில்லியன் ஃபாலோயர்கள் அவர் ஒரு மோசடி பேர்வழி என நினைத்து தற்போது அன்ஃபாலோ செய்து வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M