×

காதலரை திடீர் திருமணம் செய்த அமலாபால் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
 

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் அமலபால். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுக்கொண்டார்.
 

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர், வடநாட்டு இசைக்கலைஞர் பவீந்தர் சிங்கை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், அதுபற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், வடநாட்டு முறைப்படி பவீந்திரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் வெளியிட்டார். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் அதில் அடக்கம். ஆனால், சில நிமிடங்களில் அந்த புகைப்படங்களை அவர் நீக்கிவிட்டார்.

திடீரென அமலாபாலின் திருமண புகைப்படம் வெளியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News