×

2020 எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? -  இப்படி சொல்லிட்டாரே அமலாபால்!

 

இன்றோடு 2020ம் ஆண்டு முடிவடைகிறது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் புது வருட கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு சினிமா துறைதான் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போதுதான் சினிமா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை அமலாபால் 2020ம் ஆண்டு பற்றி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ‘2020ம் ஆண்டு எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்தது. புதிதாக சில முடிவுகளை எடுத்தேன். ஆன்மிக உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் என்கிற அகந்தை போய்விட்டது. எனக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்தேன். என் வாழ்வில் நடந்த அனைத்தையும், கவுரவமாகவும், நன்றியோடும் ஏற்றுக்கொண்டேன். வருத்தம், வேதனை, கஷ்டம் ஆகியவற்றிலிருந்து ஓடி ஒளியாமல் பாடம் கற்றுக்கொண்டேன். பழைய நண்பர்களை பார்க்க வேண்டும். விரோதிகளை மன்னிக்க வேண்டும். நம்மை அறிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் 2020ம் ஆண்டு நான் கற்றுக்கொண்ட பாடங்கள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News