Connect with us
amaran madharasi

latest news

Madharasi: அமரன் கலெக்ஷனைத் தாண்டுமா மதராஸி… சிவகார்த்திகேயனுக்கு அடிக்குமா லக்?

தற்போது சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என்ற லெவலில் தமிழ்சினிமாவில் பரபரப்பாக நடித்து வருகிறார். ஆக்ஷனில் பரபரப்பாக சிவகார்த்திகேயனை இறக்கிய படம் என்றால் அது அமரன் தான். யாருமே எதிர்பார்க்காத வகையில் வசூலை அள்ளியது. படத்தில் வழக்கமான சிவகார்த்திகேயனை யாரும் பார்க்க முடியாது.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரித்த இந்தப் படம் உலகளவில் 341.52கோடியை வசூலித்தது. சாய்பல்லவியும் அற்புதமாக நடித்து இருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக வந்தது. ரசிகர்கள் ரொம்பவே ரசித்தனர். ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் பாடல்களும் சூப்பராக இருந்தது.

அதன்பிறகு கோட் படத்தில் விஜய் எனக்கு அப்புறம் நீ பார்த்துக்கன்னு சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியைக் கொடுத்தார். தொடர்ந்து மதராஸி என்ற ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டிரெய்லரில் செம ஆக்ஷன். ஏ.ஆர.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியாக உள்ளது.

#image_title

கடந்த வாரம் வெளியான டிரெய்லர்ல ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம். உணர்வுப்பூர்வமான காட்சிகள் பெரிய அளவில் ஒட்டவில்லை. துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான்தான்கற டயலாக் பஞ்சாக உள்ளது. அமரன் கலெக்ஷனை இது மிஞ்சுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5. விரைவில் அது தெரிந்து விடும்.

சிவகார்த்திகேயனை ரசிகர்கள் அமரன் படத்துக்குப் பிறகு இப்போது அதிரடி ஆக்ஷன் நாயகனாக ஒத்துக்கொண்டார்கள். ஏ.ஆர்.முருகதாஸ்சும் அனல் பறக்கும் ஆக்ஷன் படங்களை இயக்குபவர்தான். அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு மதராஸி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றே அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். அதே போல விஜய் தான் துப்பாக்கியைக் கையில் கொடுத்தார். அவரிடமே மோதலா என்ற பேச்சும் ஓடுகிறது. ஏன்னா ஜனநாயகன் ரிலீஸ் தேதியில் தான் சிவகார்த்திகேயனின் பராசக்தியும் வரும் பொங்கலையொட்டி வெளியாகிறது என்கிறார்கள். எது எப்படியோ அடுத்தடுத்து நமக்கு ஆக்ஷன் விருந்து தயாராக இருக்கிறது.

Continue Reading

More in latest news

To Top