Categories: Cinema News latest news

அப்போ தளபதி, இப்போ திடீர் தளபதியா..? ரஜினியை விடாமல் துரத்தும் ப்ளூசட்ட மாறன்

வேட்டையனை விட இரு மடங்கு வசூலை அமரன் தந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரித்த படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் தான் படம். சாய்பல்லவி ஹீரோயின். சிவகார்த்திகேயன் மேஜராகவும், சாய்பல்லவி அவருடைய துணைவி இந்து ரெபேக்கா வர்கீஸாகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். இருவருடைய நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். தீபாவளிக்குத் திரைக்கு வந்த இந்தப் படம் வசூலில் இன்று வரை களைகட்டி வருகிறது.

போட்டியாக விஜய்

Also read: டெலிவரி பாய், ஆட்டோ டிரைவரால ‘நிம்மதியே’ போச்சு… நயன்தாராவை விளாசும் ரசிகர்கள்!

ஏற்கனவே ரஜினி படம் என்றாலே அவருக்குப் போட்டியாக விஜய் படம் தான் இருந்து வந்தது. ரஜினியின் சூப்பர்ஸ்டார் பதவி பிரச்சனை, காக்கா, கழுகு கதை சொல்லும் வரை போய்விட்டது. ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கி வந்த விஜயும் இப்போது கட்சி ஆரம்பித்து அரசியலுக்குள் நுழைந்து விட்டார்.

திடீர் தளபதி

sk

அதனால் ரஜினி ப்ரீபேர்டாக இருந்தார். இந்த நிலையில் திடீர் தளபதியாக வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே கோட் படத்தில் விஜய் இடத்தை இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியவர் தான் எஸ்.கே.

 ப்ளூசட்ட மாறன் போட்ட மீம்ஸ்

இப்போது அவரது நடிப்பில் அமரன் வேறு சூப்பர் டூப்பர்ஹிட் அடித்துவிட்டது. ரஜினியின் வேட்டையன் பட வசூலை விட இப்போது இருமடங்கு வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியை தலீவராக்கி ப்ளூசட்ட மாறன் போட்ட மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது. அதில் தலீவர் டயலாக் இப்படி பேசுகிறார்.

twitter

நமக்கு இருந்த பெரிய இம்சை விஜய் தான். அவன் சினிமாவை விட்டு போறதா சொன்னதால கொஞ்சநாள் நிம்மதியா இருந்தேன் என சொல்கிறார். அது மட்டுமல்லாமல் அவரே இப்ப இந்த திடீர் தளபதி இம்சை தர்றான. இவனை என்ன பண்றதுன்னு சிந்திக்கிறார். அங்கு இளையராஜாவின் படத்தையும், கொட்டாச்சி அவரை நக்கலாகப் பார்ப்பது போலவும் படம் போட்டு எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இளையராஜா-கொட்டாச்சி

Also read: Kanguva: ஓடிடிக்கு ‘ஓடிவரும்’ கங்குவா… ‘ரிலீஸ்’ எப்போன்னு பாருங்க! ..

இதில் இளையராஜாவை ரஜினியாகவும், கொட்டாச்சியை சிவகார்த்திகேயனாகவும் நாம் எடுத்துக் கொண்டு இந்த தலீவரோட டயலாக்கைப் படித்தால் ப்ளூசட்டமாறன் எந்தளவுக்கு ரஜினி படத்தைக் கேலி செய்துள்ளார் என்று தெரியவரும். இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று கமெண்டைப் படிக்கும்போது கேள்வி எழுகிறது.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v