SK_vijay
GoatMovie: விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தின் சாதனையை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் முறியடித்திருக்கிறது. மேலும் சில சுவாரஸ்ய சாதனைகளும் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். பொதுவாக விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எந்தவித விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்தவித மாற்றமும் இருக்காது. படத்தை வெளியிடும் திரையரங்குகள் பெரிய தொகையை எடுத்து விடும் என்பது தான் உண்மை.
இதையும் படிங்க: சத்தமே இல்லாம பட்டையை கிளப்பிய குட் பேட் அக்லி… இதுலயும் விடாமுயற்சிய மிஞ்சிட்டாங்களே?!..
அந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜயின் லியோ மற்றும் கோட் திரைப்படங்கள் பெரிய அளவில் சூப்பர் ஹிட் திரைப்படம் இல்லை என்றாலும் வசூலில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது. இதில் லியோ படம் 600 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அது போல கோட் திரைப்படத்தின் வசூல் 500 கோடியை தாண்டியது. இந்நிலையில் தீபாவளி தினத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரும் இத்திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது.
இதையும் படிங்க:உருட்டுனா இப்படிதான்… டிஆர்பியில் செம அடி வாங்கிய விஜய்… சீன் காட்டும் சன்டிவி
இந்நிலையில் திரையரங்க டிக்கெட் புக் செய்யப்படும் புக் மை ஷோ ஆப்பில் கோட் படத்தின் விற்பனை சாதனையை அமரன் முறியடித்திருக்கிறது. அந்த வகையில் கோட் படம் மொத்தமாக புக் மை ஷோ ஆப்பில் 4.517 மில்லியன் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது.
ஆனால் அமரன் திரைப்படம் 23 நாட்களில் 4.528 மில்லியன் டிக்கெட் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வருடத்தின் மிகச்சிறந்த வெற்றி படம் அமரன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…