×

காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட முதல் வெப் சீரிஸ்... அமேசான் பிரைம் முடிவால் கலங்கும் சமந்தா!

நடிகை சமந்தா நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கும் ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் ரிலீஸை காலவரையின்றி தள்ளிவைத்திருக்கிறது அமேசான் பிரைம்.
 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும்  சமந்தா, அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்திருந்த ஃபேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் நடித்திருக்கிறார். மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி ஆகியோர் நடித்திருந்த ஃபேமிலி மேன் சீரிஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த சீரிஸின் சீக்குவலான ஃபேமிலி மேன் - 2 வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சமந்தாவுக்கென தனி எமோஜியையும் டிவிட்டர் அறிமுகப்படுத்தியது. இந்த சீரியஸில் சமந்தா மிரட்டும் வில்லியாகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.


இந்த சீரிஸின் வெளியீட்டைக் காலவரையின்றி அமேசான் பிரைம் தள்ளிவைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான தாண்டவ் மற்றும் மிர்ஸாபூர் 2 ஆகிய வெப் சீரிஸ்கள் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றன. இந்தநிலையில், ஃபேமிலி மேன் - 2வை வெளியிட்டு அதனால் ஏதும் புதிய சர்ச்சை ஏற்படுமோ என அமேசான் பிரைம் தரப்பில் யோசிப்பதாகச் சொல்கிறார்கள். அதேநேரம், ஃபேமிலி மேன் 2 தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இடம்பெற்றிருக்கிறதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. 

From around the web

Trending Videos

Tamilnadu News