ஜெயிலர் 2 ஓடிடி விலை இவ்ளோ கோடியா!.. சன் டிவிக்கு கொலை குத்துதான்!..
சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த பல வருடங்களாகவே பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்து. வருகிறது ரஜினியை வைத்து எந்திரன், ஜெயிலர் போன்ற படங்களையும், சூர்யாவை வைத்து சிங்கம், சிங்கம் 2, விஜயை வைத்து சுறா, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ரஜினியை வைத்து இந்த நிறுவனம் தயாரித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. தற்போது மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது.
படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் 500 கோடியை நெருங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஒருபக்கம், ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.115 கோடிக்கு வாங்கியிருக்கிறது. எனவே, ஜெயிலர் 2 திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என கணிக்கப்படுகிறது.
