×

மாஸ்டரின் ஓடிடி எத்தனை கோடி தெரியுமா? - கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!...

 

தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்த திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படம் வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு லாபத்தை கொடுத்தாலும் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த லாபம் வரவில்லையாம். கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததால் கடுப்பான தயாரிப்பாளர் கூறியதை விட முன்பாகவே மாஸ்டர் படத்தை அமேசான் பிரைமைக்கு  கொடுத்துவிட்டார். 

மார்ச் மாதம் மாஸ்டம் வெளியாவதற்கு ரூ.36 கோடி விலை பேசப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பே கொடுத்தால் மேலும் ரூ.15.5 கோடி கொடுப்பதாக அமேசான் பிரைம் கூறியுள்ளது. எனவேதான் மொத்தம் ரூ.51.5 கோடிக்கு அமேசான் பிரைமைக்கு தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார் என்பது தெரியவந்தது.

ஒருபக்கம் படம் வெளியாகி 17ம் நாளே ஓடிடியில் விற்றுவிட்டதற்கு தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் மேல் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பான பஞ்சாய்த்து நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News