Categories: Cinema News latest news

Vijay: கண்ணிய குறைவா இருக்கு!… தரம் தாழ்ந்தவர் அல்ல விஜய்… போஸ் வெங்கட்டுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்!…

இயக்குனர் போஸ் வெங்கட் விஜய்க்கு எதிராக போட்ட பதிவுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றார் இயக்குனர் அமீர்.

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் குதித்திருக்கின்றார். தற்போது தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தான் இவரின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகின்றது.

அரசியல் வருகை: இந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து பின்னர் கட்சியின் கொடி, பாடல், கொள்கை, மாநாடு என அனைத்தையும் சிறப்பாக நடத்தி முடித்தார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக போட்டியிட இருக்கின்றார்.

இதையும் படிங்க: Nayanthara: குழந்தைகளுடன் சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா!… தாறுமாறாக எகிறும் செலவு?… புலம்பும் தயாரிப்பாளர்!…

முதல் மாநாடு: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் தனது முதல் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார். இதில் பல கட்சிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசியிருந்தார். அதிலும் ஆளும் கட்சியான திமுக கட்சியை குடும்ப அரசியல்தான் நம்முடைய அடுத்த எதிரி என்று கூறி இருந்தது அமைச்சர்கள் மற்றும் திமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

போஸ் வெங்கட் விமர்சனம்: நடிகர் விஜய் கட்சி தொடங்கியது முதலே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எல்லாம் நடிகர் விஜயை பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சம் அல்ல. அரசியலில் தான் இப்படி என்றால் சினிமா பிரபலங்களும் விஜய் குறித்து விமர்சனம் செய்து வந்தார்கள்.

அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் “ யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..” என பதிவிட்டு இருந்தார்.

அமீர் ஆதரவு: போஸ் வெங்கட்டின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான அமீர் இது தொடர்பாக பேசியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இயக்குனர் போஸ் வெங்கடின் எக்ஸ் தள பதிவினை பார்த்தேன். அது ரொம்ப கண்ணியக் குறைவாக இருக்கிறது. ஒரு பொதுவெளியில் யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. என்ற வார்த்தை அவர் பயன்படுத்தி இருக்க கூடாது.

இதையும் படிங்க: SK: தனுஷ விடுங்க நம்ம சிவகார்த்திகேயனை பாருங்க!… கைவசம் இத்தனை படங்களை வச்சிருக்காரா?!…

நீங்கள் விமர்சிக்கும் அளவிற்கு விஜய் தரம் தாழ்ந்தவர் அல்ல. விஜய்யை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். இத்தனை லட்சம் பேரை காசு கொடுக்காமல் ஒற்றை சொல்லில் கூட்டிட்டு வந்திருக்கிறார். நீங்கள் வேறு விதமாக விமர்சனம் செய்திருக்கலாம்’ என்று விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கின்றார். அமீரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

ramya suresh
Published by
ramya suresh