dhanush
தமிழ் சினிமாவில் இன்று ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளானவர் அந்த விமர்சனத்திற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அவர் நடிக்கும் படங்களில் ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறார். வரும் 26 ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
இந்தப் படத்தின் மூலம் தனுஷை இன்னொரு வெற்றிமாறனாக பார்க்கலாம் என்று அனைவரும் கூறி வருகிறார்கள். அதனால் அந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் தனுஷுக்கு என ஒரு தனி மரியாதையே இருக்கின்றது. ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் இளையராஜா பயோபிக்கில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் சேகர் கம்முலாவுடன் குபேரன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி பல படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷை பற்றி நடிகரும் இயக்குனருமான அமீர் ஒருதகவலை பகிர்ந்தார். அதாவது தனுஷ் நடிப்பில் மாறன் என்ற திரைப்படம் வெளியானது. 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பொலிட்டிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்தது.கார்த்திக் நரேன் என்பவர் இந்தப் படத்தை இயக்கினார்.
தனுஷுடன் இணைந்து மாளவிகா மோகனன், அமீர், சமுத்திரக்கனி , ராம்கி , மகேந்திரன் , கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். முதலில் இந்தப் படத்தின் கதை கேட்டு அமீர் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.
ஆனால் அமீர் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என கருதிய தனுஷ் அமீரை அழைத்து எப்படியாவது நீங்கள்தான் நடிக்க வேண்டும் என கூறினாராம் . உடனே அமீர் ‘சனிபூனை துணை கேக்குற மாதிரி இருக்கு தனுஷ்’ என கூறினாராம். இதை கேட்டதும் தனுஷ் சிரிக்க தனுஷுக்காக மட்டும்தான் இந்தப் படத்தில் நடித்தேன் என அமீர் ஒரு பேட்டியில் கூறினார். கடைசியில் மாறன் திரைப்படம் அட்டர் ஃப்ளாப் ஆனதுதான் மிச்சம்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…