×

2வது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான் - திரையுலகினர் அதிர்ச்சி

 
amirkhan

பாலிவுட் திரையுலகின் கமல்ஹாசன் என அழைக்கப்படுபவர் அமீர்கான். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர். சிறந்த கதைகளில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தரமான படைப்புகளை கொடுத்து வருபவர் அமீர்கான். அவர் நடித்த 3 இடியட்ஸ், தங்கல், பீ.கே, கஜினி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை கொடுத்தது. தற்போது ஹாலிவுட்டில் ஹிட் அடித்த Forrest Gump திரைப்படத்தின் பாதிப்பில் ‘லால் சிங் சதா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இவர் 2005ம் ஆண்டு கிரண்ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.  அமீர்கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். லகான் படத்தில் நடித்த போது அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற் கிரண்ராவ் மீது காதல் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்கிற மகன் இருக்கிறான்.

amirkhan

இருவரும் முழு சம்மதத்துடன் விவாகரத்து பெற்றதாகவும், கணவன் - மனைவியாக இல்லாமல் தங்களின் மகனுக்கு பெற்றோராக, நண்பர்களாக தொடர்ந்து பயணிப்போம் எனவும், திரைப்படங்களில் இணைந்து பணியாற்றுவோம் எனவும், இது முடிவல்ல ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் எனவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News