×

அமிதாப் பச்சன் , அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று பாசிடிவ்...!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பமாக ஜொலிக்கும் அமிதாப் பச்சன்  குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி நேர்ந்துள்ளது. முதலில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதை நேற்று இரவு உறுதி செய்தனர். அதையடுத்து மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தார்.

 

இதையடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே வீட்டில் அடுத்தடுத்து இருவருக்கு தொற்று இருப்பதை அறிந்து பதறிய குடும்பத்தினர் ஜெயா பச்சன்,  ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா ஆகிய மூவரையும் பரிசோதித்து பார்க்கையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அமிதாப் பச்சன் , அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் குடும்பத்தினருக்கே கொரோனா தொற்று இருப்பதை அறிந்து அனைவரும் பதற்றத்தில் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News