×

அமிதாப் பச்சன் மனைவியின் தூக்கத்தை கெடுத்த இளைஞர் - மும்பையில் பரபரப்பு!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்று பச்சன் குடும்பம். சமீபத்தில் இந்த குடும்பத்தில் இருந்து, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், ஆரத்யா பச்சன் என அமிதாப்பின் மனைவி தவிர குடும்பத்தில் நான்கு பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

 

எனவே தற்ப்போது மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள வீட்டில் ஜெயா பச்சன் மட்டும் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி நள்ளிரவில் தன் வீட்டின் அருகாமையில் அதிக இரைச்சலுடன் பைக் ஒன்று அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்ததால் துக்கத்தை இழந்து கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளார் ஜெயா பச்சன்.

உடனடியாக குறித்து ஜூகு காவல் நிலையதிற்கு புகார் கூற சமத்துவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பைக்கின் பதிவு எண்ணை கண்டறிந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எங்களுக்கு புகார்கள் வந்து கொண்டுள்ளன என போலீசார் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News