×

அம்மாடியோவ்! விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? நம்பவே முடியலையே!

நடிகர் விஜய் வீட்டில் சென்ற மாதம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் பணம் அல்லது ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்பட்டது.
 

அதே நேரத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ருபாய் பணம் சிக்கியது.

இந்நிலையில் இன்று மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சென்ற மாதம் நடத்தப்பட்ட சோதனையில் பூட்டப்பட்ட லாக்கர்கள் மற்றும் அறைகளில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது என கூறியுள்ளனர்.

இன்று காலை சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் இதனை செய்துள்ளனர்.

மேலும் விஜய் பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களுக்குகாக வாங்கிய சம்பளம் பற்றிய விவரத்தையும் வெளியிட்டுள்ளனர். பிகில் படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திற்காக 80 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

விஜய் சம்பளம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் என சில மாதங்கள் முன்பு செய்திகள் பரவியது. இந்த நிலையில் தான் இப்போது அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News