Connect with us

Cinema News

கோவிலில் கல்யாணம்!.. மணப்பெண்ணுக்கு பீரியட்ஸ்.. கண்ணகி படத்தின் செம கிளைமேக்ஸ் சீன் இதோ!..

சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணகி வரும் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் கீர்த்தி பாண்டியனையும் சேர்த்து 4 இளம் பெண்களின் வாழ்க்கை போராட்டமாக உருவாகி இருக்கிறது. இதில்,  அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மறைந்த நடிகர் மயில்சாமி, மெளனிகா உள்ளிட்ட பலர் லீடு ரோலில் நடித்துள்ளனர்.

படிப்பு அறிவு வந்துட்டா பகுத்தறிவு தானா வளரும் என சொன்னாலும், சிலர் இன்னமும் மூட நம்பிக்கையில் இருந்து மீளமாட்டோம் என அடம்பிடித்து வருகின்றனர். பெண்களை தாய்மையடைய உதவியாக இருக்கும் பீரியட்ஸ் விஷயம் பெண்கள் பெரிய மனுஷியாக மாறுவதில் இருந்து வரும், அதை தீட்டாக கருத வேண்டாம் என்றும் சாமி எல்லாம் ஒன்றும் கண்ணைக் குத்தாது என அயலி வெப்சீரிஸில் அழுத்தம் திருத்தமாக கூறிய நிலையில், அதே போன்ற விஷயத்தை கண்ணகி படத்தின் கிளைமேக்ஸிலும் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டில் திடீரென நீலம்பரியாக மாறிய விசித்ரா!.. தினேஷை இறுக்கி அணைத்து.. அய்யோ போங்க!..

கோயிலில் அம்மு அபிராமிக்கு திருமணம் நடைபெறும் நேரத்தில் பீரியட்ஸ் ஏற்பட அந்த சூழ்நிலையை அவரது அம்மா மெளனிகா எப்படி மகளை பெற்ற தாயாகவும் ஒரு பெண்ணாகவும் சமாளிக்கிறார் என்கிற காட்சி தான் தற்போது வெளியாகி உள்ளது. இதே போல பல விஷயங்கள் பெண்களை போட்டு அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை இந்தப் படம் பேசியிருக்கிறது.

இந்த வாரம் டிசம்பர் 15ம் தேதி கண்ணகி திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், அதன் ஸ்நீக் பீக் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top