×

அரசை கடுமையாக விளாசி தள்ளிய நடிகை அமைரா

பாலிவுட் நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசை விளாசித் தள்ளி உள்ளார் நடிகை அமைரா தஸ்தூர்.
 
அரசை கடுமையாக விளாசி தள்ளிய நடிகை அமைரா

பாலிவுட் நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசை விளாசித் தள்ளி உள்ளார் நடிகை அமைரா தஸ்தூர்.

கடந்த ஆண்டே கொரோனா பாதிப்பை சந்தித்த நிலையில், உரிய மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் கொத்து கொத்தாக மடிவதை பார்க்க முடியவில்லை.

மருத்துவத் துறையில் உரிய வளர்ச்சியை செய்யாமல் இந்த பேரிழப்பை கொடுத்துள்ள மத்திய அரசை மன்னிக்கவே முடியாது என நடிகை அமைரா தஸ்தூர் விளாசித் தள்ளி இருக்கிறார்.

நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசின் மருத்துவ துறையின் அலட்சிய போக்கை மன்னிக்கவே முடியாது என நடிகை அமைரா தஸ்தூர் விளாசித் தள்ளி உள்ளார். "It's Unforgivable" என கடுமையாக சாடியுள்ளார் அனேகன் படத்தின் நாயகி.

கடந்த ஆண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டோம், ஒரு வருடன் ஆன பின்னரும் இந்த ஆண்டு அதை விட கொடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். நாட்டு மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் நாள் தோறும் 4000 மக்கள் இறப்பதை அரசு எப்படித்தான் வேடிக்கை பார்க்கிறோதே என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் துளியும் அக்கறை இல்லாமல் அரசு காட்டிய மெத்தன போக்கே இந்த நிலைமைக்கு காரணம். இதை ஒரு போதும் மன்னிக்கவே முடியாது என அவர் கூறியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News