8 நிமிட புரமோஷன் வீடியோ!.. அரசன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அனிருத்!...

 
arasan

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு அரசன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கினாலும் தற்போது வரை படப்பிடிப்பு முடியவில்லை. அதற்கு காரணம் அரசன் படத்தை இயக்கிக் கொண்டே ஒரு பக்கம் கென் கருணாசை வைத்து ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இதன் காரணமாக அரசன் படம் தாமதமாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் சிம்புவே அப்செட்டாக இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் பாதி வளர்ந்துவிட்ட நிலையில் அவராலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். ஒருபக்கம், இந்த படத்திலிருந்து அனிருத்தை தூக்கி விட்டதாக செய்திகள் கடந்து சில நாட்களாகவே பரவி வருகிறது. அதற்கு காரணம் தீபாவளியன்று வெளியான Arasan Fire புரமோஷன் வீடியோவுக்கு அனிருத் இசையமைக்கவில்லை..

எனவே, அவரை அரசன் படத்திலிருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதில் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை அரசன் படத்திற்கு இசையமைக்க வைக்க வெற்றிமாறன் முடிவு செய்துவிட்டதாக செய்தி வெளியானது. இந்தவார இறுதியில் நடைபெறவுள்ள தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அரசன் படத்திற்கான 8 நிமிட புரமோஷன் வீடியோவிற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார் எனவும், இந்த வீடியோ வெளியாகும் போது படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டதாக பரவி வரும் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Murugan ..
Murugan ..

5172 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web