
Cinema News
சினிமா புகழ் எல்லாத்துக்கும் உதவாது!.. மறைமுகமாக தாக்கிய ரஜினி?.. வைரலாக்கும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதிலும் ஸ்லோமோஷன் வாக்கிங்கில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி இன்னும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு கடும் போட்டியாளராக விளங்குகிறார். எத்தனை புது முகங்கள் வந்தாலும் ரஜினி என்ற ஒரு முகத்தை யாராலும் மறக்கடிக்க முடியவில்லை.
வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களும் ரஜினியின் தீவிர ரசிகனாகவும் அவரின் ஸ்டைல்களை பாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான கூலி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பான் இந்தியா அளவில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் 400 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து வருகிறது. எவ்வளவு வயதானாலும் ரஜினிக்கான மாஸ் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
லிங்கா, கோச்சடையான் போன்ற படங்களால் ஒரு கட்டத்தில் ரஜினி படங்களும் ரசிகர்களுக்கு போர் அடித்து விட்டது. இதனை உணர்ந்த ரஜினி தன்னுடைய வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களை நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு நடித்த கபாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றயை கொடுத்தது.

அதுவரை இளம் வயது கெட்டப் போட்டுக் கொண்டு தனது மகள் வயது ஹீரோயின்களுடன் பாட்டு பாடி ஆடிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஒரு திருப்புனையை ஏற்படுத்தித் கொடுத்தவர் பா ரஞ்சித். தன்னுடைய படத்தில் ரஜினியை முழுவதுமாக மாற்றி அவர் வயதுக்கு ஏத்த கெட்டப் கொடுத்து கமர்சியல் ஹீரோவாக சக்ஸஸ் கொடுத்தார்.
அதன் பிறகு வெளியான படங்களிலும் அதே ஃபார்முலாவை பின்பற்றி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. காலத்துக்கு ஏற்ப சுதாரித்து தன்னுடைய பேர் புகழை எல்லாம் கட்டிக் காத்தாலும் அது சினிமாவைத் தவிர வேறு எங்கும் உதவாது என்று ரஜினியின் பழைய பேட்டி ஒன்றை ரஜினி ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர். இன்றைய தமிழ் சினிமாவில் ரஜினிக்கு போட்டியாக பார்க்கப்படுபவர் விஜய்.
இன்டர்நெட்டில் தற்போது வார் என்றால் அது ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே நடப்பது தான். அரசியல், மாநாடு என விஜய் தற்போது பிஸியாக சுற்றி வருவதால் அவரை கடுப்பேத்துவதற்காகவே ரஜினி ரசிகர்கள் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். அதில் ”என்னால் பத்து லட்சம் பேரை எளிதில் திரட்டி மாநாடு நடத்த முடியும்.
ஆனால் என் அரசியல் தோல்வி அடைந்தால் என் ரசிகர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? சினிமா புகழ் எல்லாவற்றிற்கும் உதவாது” என பேசி இருந்தார். தற்பொழுது இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் வைரல் செய்து விஜய் ரசிகர்களை கடுப்பேற்றி வருகின்றனர்.